
சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.சென்னை தரமணியில் உள்ள ஆராய்ச்சி பூங்காவில் தமிழ்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமப்புற 10 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எஸ்டிஇஎம் திட்டத்தின் 6 நாள் பயிற்சி வகுப்பினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க:பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண் சான்றிதழ் எப்போது, எப்படி பெறலாம்..? அறிவிப்பு..
எஸ்டிஇஎம் எனும் கோடைக்கால பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக எதுவும் இருந்துவிட கூடாது எனும் நோக்கில் சென்னை ஐஐடியில் பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே சென்னை ஐஐடி சார்பில் தொடங்கப்பட்டுள்ள எஸ்டிஇஎம் திட்டம் பெருமைக்குரியது. இந்த 6 நாட்கள் பயிற்சியினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மாநில கல்விக்கொள்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநில கல்வி கொள்கை வளர்ச்சி அடையும் என்றார். சென்னை ஐஐடியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க: மக்களே உஷார்..கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !
இதனிடயே கொரோனா காலத்திலும் அரசு பொதுத்தேர்வில் மாணவர்களின் 93 % தேர்ச்சி பெருமை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். நிச்சயம் 100% தேர்ச்சியை நோக்கி செல்வோம் என்றும் அதற்கான நடவடிக்கை வரும் நாட்களில் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.முன்னதாக இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76 % பேரும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07 % பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் 97.95% பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 10 ஆம் வகுப்பில் 97.22% பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.