
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. ஜனவரி மாதம் ஓமிக்ரான் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு குறைந்தது. இதனிடையே நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பல வாரங்களுக்குப் பின்னர், நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 12 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றாலும் கூட சில வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கூட கிட்டதட்ட அதேநிலை தான் என்று கூறலாம். தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் உத்தரவிட்டுள்ளார். இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
பொது இடங்களில் 6 அடி தூரம் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : AIADMK : வருகிறது இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா அதிமுக ? குழப்பத்தில் தொண்டர்கள்!