11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை.. மெட்ரிக் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை போட்ட உத்தரவு.. மீறினால் நடவடிக்கை

By Thanalakshmi VFirst Published Jun 24, 2022, 11:31 AM IST
Highlights

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் இட ஒதுக்கீடு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் படி பொதுபிரிவில் 31%,  ST 1%, SC 18%, MBC 20%, BCM 3.5%, BC 26,5 % இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13 ஆம் தேதி 1 முதல் 10 வகுப்பு  வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 20  ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவு வெளியாகின. அதே போல், ஜூன் 20 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. வரும் ஜூன் 27 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் இட ஒதுக்கீடு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுபிரிவில் 31%,  ST 1%, SC 18%, MBC 20%, BCM 3.5%, BC 26.5 % இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முக்கிய தகவல்.. தொழிற்கல்வி சேர்க்கையில் இட ஒதுக்கீடு.. யாரெல்லாம் தகுதி.. ? அரசு வெளியிட்ட அறிவிப்பு..

மேல்நிலைபள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, முதலில் பொது பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டுக்கு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்.. திருச்சி சிவா மகன் கைதுக்கு எதிராக கண்சிவக்கும் அண்ணாமலை.!

இதே போல், 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் அனைத்து பள்ளிகளும், மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று, கால அவகாசம் நிர்ணயித்து, அதன்பிறகே மதிப்பெண், இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றி, தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும். இறுதியாக, விதிகளை பின்பற்றி, மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். 

மாறாக தங்களின் விருப்பத்துக்கு பாடப் பிரிவுகளை ஒதுக்குவது, சிபாரிசு அடிப்படையில், தேவையான பாடப்பிரிவுகளை வழங்குவது போன்ற விதிமீறல்கள் இருக்கக் கூடாது. இது குறித்து, புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர் சேர்க்கை குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க: காலியாக உள்ள 13ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்.. உடனடியாக நிரப்ப உத்தரவு.. சம்பளம் எவ்வளவு..? அறிவிப்பு

click me!