ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை கொட்டும் இடத்தில் மத்திய வனத்துறை, சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த மூத்த வல்லுநர்கள் கள ஆய்வு பணிகளை நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை கொட்டும் இடத்தில் மத்திய வனத்துறை, சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த மூத்த வல்லுநர்கள் கள ஆய்வு பணிகளை நடத்தினர்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழுவினர், தூத்துக்குடி - புதுக்கோட்டை அருகே ஸ்டெர்லைட் தாமிர கழிவுகள் கொட்டும் இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு குழுவில் மத்திய வனத்துறை, சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். கள ஆய்வுக்குப் பிறகு, நாளை காலை ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
ஏற்கனவே தேசிய தீர்ப்பாயம் இப்படியான உத்தரவை பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு வழக்கும் தொடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில் தூத்துக்குடிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு வந்துள்ளது. தற்போது அந்த குழுவினர் தங்களது ஆய்வு பணியினை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வு பணி நடைபெறுவதையொட்டி, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரியும், மதிமுக பொது செயலாளர் வைகோவும் உடனிருந்தனர். ஆலை கழிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டவர்களிடம் அது குறித்து விளக்கினார்.
ஸ்டர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளித்தனர். தாமிர கழிவால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி விளக்கினர். மேலும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றனர். தற்போது தூத்துக்குடியில் முதற்கட்ட கள ஆய்வை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக உயர் அதிகாரிகளைக் கொண்டு ஆலோசனை நடத்தப்படும என்று கூறப்படுகிறது.