கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைப் போட்டுத் தள்ளிய இளம் பெண்… தூங்கிக் கொண்டிருந்தவரை கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடுமை…

By Selvanayagam P  |  First Published Sep 17, 2018, 5:53 AM IST

தூத்துக்குடி அருகே மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்ய திட்டமிட்டிருந்த இளைஞரை கள்ளக் காதலனும், மனைவியும் சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்க நாயக்கன்பட்டியை சேர்ந்த  உதயகுமார் அங்குள்ள  பஸ் நிறுத்தம் அருகே கோழிக்கடை நடத்தி வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாஷாதேவி என்பவரை உதயகுமார் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு  குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாஷாதேவி கணவரை பிரிந்து கோவில்பட்டி மந்திதோப்பில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

இதையடுத்து ஒரு குழந்தை  உதயகுமாருடனும், மற்றொரு கைக்குழந்தை மாஷா தேவியுடனும் வசித்து வருகின்றனர். உதயகுமார் இரவில் கடை அருகிலேயே படுத்து தூங்கி விடுவார். இதே போல் கடந்த 13-ந் தேதி இரவு கடையை அடைத்துவிட்டு கடை அருகில் தூங்கினார்.

இந்நிலையில் கோழிக்கடை முன்பு உதயகுமா அங்கு நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் ஒன்று  வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்கள் நடத்திய  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் மாஷா தேவிக்கும் அக்க நாயக்கன்பட்டியை சேர்ந்த  ரஞ்சித்குமாகும் இடையே கள்ளக் தொடர்பு இருந்தது உதயகுமாருக்கு தெரியவந்தது.

இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மாஷாதேவி தனது 2-வது குழந்தையை தூக்கி கொண்டு கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதில் மனவேதனை அடைந்த உதயகுமார் ரஞ்சித்குமாரை  கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். இதை தெரிந்து கொண்ட மாஷா தேவி தனது கள்ளக்காதலனிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து கள்ளக்காதலன் உதயகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ரஞ்சித் குமாரை போலீசார் கைது செய்தனர். மாஷா தேவியிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!