ஊதியக் குழு பரிந்துரைகளை கோயில் பணியாளர்களுக்கும் செயல்படுத்த வேண்டி கோரிக்கை...

 
Published : May 09, 2018, 10:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
ஊதியக் குழு பரிந்துரைகளை கோயில் பணியாளர்களுக்கும் செயல்படுத்த வேண்டி கோரிக்கை...

சுருக்கம்

Request for Payment of Workers Guidelines

மதுரை

ஊதியக் குழு பரிந்துரைகளை திருக்கோயில் பணியாளர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. 

இதுகுறித்து மதுரையில் தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்க துணைத் தலைவர் செந்தில் கூறியது: 

"திருக்கோயில் பணியாளர்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் செயற்குழுக் கூட்டம் திருச்சி சமயபுரத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் தேவராஜன், செயலர் எஸ். ஜீவானந்தம் ஆகியோர் தலைமைத் தாங்கினார். 

இந்த கூட்டத்தில், "ஊதியக்குழு பரிந்துரைகளை கோயில் பணியாளர்களுக்கும் செயல்படுத்தவேண்டும்.

ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய துறைரீதியிலான நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், திருக்கோயில் பணியாளர் கூட்டமைப்பு சார்பில் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் எனவும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கத் தலைவர் ஷாஜிராவ், துணைச் செயலர்கள் சேது, புகழேந்தி, ருக்மணிபிரியா உள்ளிட்டோரும் இருந்தனர்" என்று அவர் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!