
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் செயற்கை மணல் தயாரித்த இருவரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே மார்க்கண்டேய நதியில் மணலைத் தோண்டி எடுத்து, அவற்றின் மீது வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து செயற்கை மணல் தயாரிக்கின்றனர் என்று வேப்பனஅள்ளி காவல் உதவி ஆய்வாளர் அறிவழகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து, அவரது தலைமையில் காவலாளர்க்கள், நிகழ்விடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, செயற்கை மணல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தரணிசந்திரத்தைச் சேர்ந்த சக்கரப்பன் (49), ஐயப்பனப்பள்ளியைச் சேர்ந்த சதாசிவப்பன் (40) ஆகியோரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், செயற்கை மணல் தயாரிக்க பயன்படுத்திய மோட்டார் உள்ளிட்ட பொருள்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.