chembarambakkam: உஷார்... செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்தாச்சு... அடையாறு கரையோர மக்களுக்கு அலர்ட்

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இன்று காலை முதல் ஆயிரம் கன அடி நீர்திறக்கப்படவுள்ளது. இதன் காரணமாக அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தொடரும் கன மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் மழைநீரானது தேங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு குளங்கள் ஏரி நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலாமக உருவாகி உள்ளது. வருகிற 2 ஆம் தேதி புயலாக உருவெடுத்து கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நீர் பிடிப்பு பகுதியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. 

Latest Videos

செம்பரம்பாக்கத்தில் 1000 கன அடிநீர் திறப்பு

சென்னையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது 22.35 கன அடிநீர் நிரம்பியுள்ளது. மேலும் 500 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏரிகளில் இருந்து தண்ணீரானது திறந்து விடப்படுகிறது. ஏற்கனவே 200 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

vegetables price list : ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை.! கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

click me!