திருக்குறளை இழிவுபடுத்தும் நூல் வெளியீடு! தமிழறிஞர்கள் கடும் கண்டனம்!

Asianet News Tamil  
Published : Feb 15, 2018, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
திருக்குறளை இழிவுபடுத்தும் நூல் வெளியீடு! தமிழறிஞர்கள் கடும் கண்டனம்!

சுருக்கம்

Release of the book against Thirukkural

தொல்லியல் ஆய்வாளரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான நாகசாமி எழுதியுள்ள ஆங்கில நூல், திருக்குறளை இழிவுபடுத்தியுள்ளதாக தமிழறிஞர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞர் இரா. நாகசாமி. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது பணிகளைப் பாரட்டி இந்திய அரசு இவருக்கு 2018 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கியது.

தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி, Thirukkural - An Abridgement of Sastras என்ற தலைப்பில் ஆங்கில நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நாகசாமி. தொல்லியல் ஆய்வாளராக இருந்தும், இந்துத்துவா சார்பானவர் என்பதால் இந்த விருது வழங்கியதாக சர்ச்சைகளும் எழுந்தது.

தமிழும், தமிழர்தம் தொன்மையான நூல்களும், சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை என்கிற கோட்பாட்டைக் கொண்டவர் நாகசாமி. இதனால் அவரது பல ஆய்வுகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகின.

இந்த வகையில் தற்போது, நாகசாமி எழுதியுள்ள Thirukkural - An Abridgement of Sastras என்ற ஆங்கில நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூலில், திருக்குறளை இழிவுபடுத்தியுள்ளதாக தமிழறிஞர்கள் கூறியுள்ளனர். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாகசாமி எழுதியுள்ள திருக்குறள் நூலுக்கு, வரிக்குவரி மறுப்பு தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஒடிஷா அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் முனைவருமான ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர், நாகசாமியின் நூலுக்கு கடும் கடுமையாக தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!