
சிவகங்கை
சிவகங்கையில் வங்கியில் வைத்திருந்த நகையைத் திருப்ப வந்த பெண்ணிடம் இருந்து ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சேவிணிப்பட்டியைச் சேர்ந்தவர் பூமாலை மனைவி நல்லம்மாள் (28).
இவர் கீழச்சிவல்பட்டி வங்கியில் தனது நகையை அடமானம் வைத்துள்ள நிலையில் நேற்று நகையை திருப்புவதற்காக வங்கிற்கு வந்துள்ளார்.
அப்போது, நகை திருப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு பணம் கட்டுவதற்காக தனது தோளில் மாட்டியிருந்த பையில் வைத்திருந்த பணத்தை பார்த்துள்ளார்.
அப்போது,அந்த பையில் வைத்திருந்த ரூ.61 ஆயிரத்து 500 திருடு போனதை அறிந்து வங்கியில் கூச்சலிட்டார். பின்னர் வங்கியிலேயே பணத்தை திருடு போனதை நினைத்து கதறி அழுதார்.
பின்னர், இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.