பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்... அண்ணா பல்கலை. சூப்பர் அறிவிப்பு!!

Published : Apr 03, 2023, 07:38 PM IST
பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்... அண்ணா பல்கலை. சூப்பர் அறிவிப்பு!!

சுருக்கம்

பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு NET அல்லது SLET அல்லது PhD கட்டாயமில்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு NET அல்லது SLET அல்லது PhD கட்டாயமில்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு கட்டாய NET, SLET, PhD தகுதிகளை அறிமுகப்படுத்தியது. இது இந்த தகுதிகள் இல்லாத ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொறியியல் கல்லூரிகளும் ஆசிரியர்களை ஏற்கனவே இருந்த விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டதாகக் கூறி அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதிய அறிவிப்பில் தளர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்.. ஊக்கப்படுத்திய தமிழக அரசு !!

அதனை ஏற்ற அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்துவதை முன்னிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மனிதநேயப் பேராசிரியர்களுக்கான விதிமுறைகளை தெளிவுபடுத்தும் சுற்றறிக்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு மையம் வெளியிட்டுள்ளது. அதில், மார்ச் 1, 2019க்கு முன் அல்லது அதற்கு முன் சேர்ந்த NET அல்லது SLET அல்லது PhD இல்லாத தற்போதைய அறிவியல் மற்றும் மனிதநேய ஆசிரியர்கள் அதே கல்லூரியில் தொடர அனுமதிக்கப்படலாம்.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவிக்கு அரிவாள் வெட்டு; ஒருதலை காதலன் கைது

மார்ச் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு அதே பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பிற இணைப்புக் கல்லூரிகளுக்கு பதவி உயர்வுகள் அல்லது பணி மாறுதலாகி சென்ற ஆசிரியர்களும் மேற்கண்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. அதேநேரம், மார்ச் 1, 2019 க்குப் பிறகு எந்த ஒரு நிறுவனத்திலும் எந்தப் பதவியிலும் முதல் முறையாக சேர்ந்த ஆசிரியர்கள் NET அல்லது SLET அல்லது SET அல்லது PhD தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி