
சேலம் அரசு மருத்துவமனையில் பல்கீஸ் என்ற சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியானதற்கு முறையான சிகிச்சை அளிக்காததே காரணம் என கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கலை சேர்ந்தவர்கள் சாகூல்- சகிலா தம்பதியினர். இவர்களுக்கு பல்கீஸ் என்ற 7 வயது மகள் இருந்தார்.
அவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியை அவர்களது பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்துள்ளனர்.
அங்கு அவருக்கு டெங்கு என உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், பல்கீஸ் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார்.
இதையடுத்து சிறுமி பல்கீஸின் உயிரிழப்பிற்கு அரசு மருத்துமனையில் முறையான சிகிச்சை அளிக்காததே காரணம் என கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் சமரசம் பேசி வருகின்றனர்.