Ration Shop: மக்கள் கவனத்திற்கு..! நாளை ரேஷன் கடை இயங்காது.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கூட்டுறவுத்துறை..

Published : Mar 18, 2022, 04:11 PM IST
Ration Shop: மக்கள் கவனத்திற்கு..! நாளை ரேஷன் கடை இயங்காது.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கூட்டுறவுத்துறை..

சுருக்கம்

Ration Shop: தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.  

நியாய விலை கடை:

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக் கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை நாள் ஆக உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை தங்கு தடையின்றி வாங்குவதற்காக மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பு:

இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டன. இதனிடையே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிற்ப்பு தொகுப்பு கொடுத்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொங்கல் முடிந்தும் அந்த மாதம் முழுவதும் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டன.

மேலும் படிக்க: "பட்ஜெட் முடியட்டும்.. எல்லாமே பண்ணிடலாம்.." ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அன்பில் மகேஷ் !

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை:

அதன் காரணமாக அந்த மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோககம் தாமதமாக தொடங்கியது. ஜனவரி மாதத்துக்கான பொருட்களை அந்த மாதம் முடிவதற்குள் அளிக்க வேண்டும் என்பதால், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு வர வேண்டியதானது. இதனால், விடுமுறை நாளான ஜன., 30ல், ரேஷன் கடைகள் செயல்பட்டன. 

இதுவரை அந்த விடுமுறை நாள் வேலை செய்ததற்கு விடுமுறை நாள் கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த தினத்துக்கான மாற்று விடுப்பை கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 19ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் செயல்படாது.

மேலும் படிக்க: TN Budget 2022-23: அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000... தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!