ரேசன் அட்டைகள் முடக்கம்; மக்கள் தாலுகா அலுவலகத்தில் வரிசையில் காத்திருப்பு…

First Published Jan 12, 2017, 10:18 AM IST
Highlights

தூத்துக்குடியில் ரேசன் அட்டைகளை முடக்கியதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்களை வாங்காமல் தவிக்கின்றனர். மேலும், முடக்கத்தை நீக்க தாலுகா அலுவலகத்தில் வரிசையில் காத்திருக்கின்றனர்.

மோடியின் அறிவிப்பால் மக்கள் ஏ.டி.எம் வாசலில் நின்றுக் கொண்டிருக்கும் தருவாயில், தற்போது, ரேசன் அட்டைகளை முடக்கியதின் மூலம் மக்கள் தாலுகா அலுவலகத்தில் வரிசையில் நிற்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் டோக்கன் வழங்கப்படுகிறது.

உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற நாள் பொங்கல் திருநாள். தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாமகளில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு முதலமைச்சர்  அறிவுறுத்தலின்படி வழங்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 958 நியாயவிலைக் கடைகளில் 4 இலட்சத்து 24 ஆயிரத்து 878 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 91 இலட்சத்து 19 ஆயிரத்து 510 மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். என்று தெரிவித்தார்கள். ஆனால் ரேசன் அட்டையை முடக்கியதால், பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

மாதந்தோறும் ரேசன் பொருள்களை முறையாக வாங்கிய அட்டைகளையும் முடக்கியதால் இவர்களும் ரேசன் பொருள்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

தாலுகா அலுவலகம் வந்த தம்பதியினர், அட்டையை முடக்கியதால் இன்று விடுமுறை போட்டு வந்துள்ளோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் பத்தாயித்துக்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை முடக்கியதால் தொழிலாளிகள் பொங்கல் பொருள்கள் வாங்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர்.

click me!