Coimbatore Mayor : கோவை மாநகராட்சி திமுக வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த ரங்கநாயகி.?

By Ajmal Khan  |  First Published Aug 5, 2024, 11:40 AM IST

நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் பெயரை திமுக தலைமை நேற்று அறிவித்த நிலையில், இன்று கோவை மாநகர மேயர் திமுக வேட்பாராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். 


நெல்லை, கோவை மேயர் மாற்றம்

தமிழகத்தில் திமுக ஆட்சி கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெற்றி பெற்ற திமுகவிற்கு கோவை கை கொடுக்கவில்லை. போட்டியிட்ட 10 இடங்களில் தோல்வியை தழுவியது. ஆனால் அடுத்த நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் அதிமுகவிடம் இருந்து அதிகாரத்தை பறித்தது. இதனையடுத்து கோவை மாநகர மேயராக கல்பனா நியமிக்கப்பட்டார்.  

Tap to resize

Latest Videos

ஆரம்பத்தில் இருந்து மேயருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் மோதல் நீடித்தது. பல முறை திமுக மூத்த நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தாலும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. கோவை மேயரை மாற்ற வேண்டும் என விடாப்பிடியாக இருந்தனர். இந்த  நிலையில் தான் நெல்லை மற்றும் கோவை மேயர் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.

Nellai Mayor candidate : நெல்லை மேயர் திமுக வேட்பாளர் அறிவிப்பு.? யார் இந்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன்.?

கோவை மேயர் யார்.?

இன்று நேல்லை மேயர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று திமுக சார்பாக மேயர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்படி 3 முறை கவுன்சிலராக இருந்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் மேயராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்தநிலையில் கோவை மேயர் பதவியை பிடிக்க திமுக மூத்த நிர்வாகிகள் போட்டி போட்டனர். கவுன்சிலர் அம்பிகா தனபால், நிவேதா சேனாதிபதி ஆகியோரில் ஒருவர்  மேயராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 29வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். 

யார் இந்த ரங்கநாயகி.?

கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தல் நாளை 6 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவையில்  திருமண மண்டபத்தில் திமுக மூத்த அமைச்சர்கள்  கேஎன்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக  ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார்.  10ஆம் வகுப்பு வரை படித்துள்ள ரங்கநாயகி  29 வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். 

click me!