நாளை, நாளை மறுநாள்… ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் போக முடியாது…!

By manimegalai aFirst Published Oct 4, 2021, 9:00 PM IST
Highlights

நாளையும், அதற்கு மறுநாளும் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

நாளையும், அதற்கு மறுநாளும் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்திருந்தாலும் சுகாதாரத் துறை கடுமையாக வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் ஏற்கனவே ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில், நாளை மறுநாள் மகாளய அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், பக்தர்கள் உத்தரவை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவில் ராமேஸ்வரத்துக்கு வர நினைத்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

click me!