தமிழகம் முழுவதும் நேற்று 4வது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காந்திநகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு கொரோனோ தடுப்பூசி முகாமில் ராஜா (53) என்ற விவசாய கூலித் தொழிலாளி முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருடன் மகள் நாகலட்சுமியும் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
திண்டுக்கல் அருகே கொரோனா முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்ட 2 மணி நேரத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று 4வது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காந்திநகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு கொரோனோ தடுப்பூசி முகாமில் ராஜா (53) என்ற விவசாய கூலித் தொழிலாளி முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருடன் மகள் நாகலட்சுமியும் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
undefined
இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் மகள் நாகலட்சுமியை அருகே சமத்துவபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இறக்கி விட்டு தனது வீட்டிற்கு வந்தார். வந்த சிறிது நேரத்தில் ராஜாவுக்கு திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வரியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 மணி நேரத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.