திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட யணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து தாளையம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது கோவையில் செங்கல் லோடு இறங்கி விட்டு திரும்பி வந்துகொண்டிருந்த லாரி அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பழனி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட யணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து தாளையம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது கோவையில் செங்கல் லோடு இறங்கி விட்டு திரும்பி வந்துகொண்டிருந்த லாரி அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
undefined
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் லாரியை இயக்கியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.