இந்துசமய அறநிலையத் துறையின் அதிரடி வேட்டை… நத்தம் அருகே 24 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு….!

By manimegalai a  |  First Published Sep 22, 2021, 1:44 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை மீட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை மீட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பின்னர் கோயில் சொத்துகளை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். திமுக இந்துக்கள் எதிரானவர்கள் என்ற பிம்பத்தை உடைக்க இந்து ஆலயங்களை புனரமைப்பது, கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் அதிரடியாக நடைபெற்று வருகின்றன.

Tap to resize

Latest Videos

undefined

 

இந்த திட்டத்தை நூறு சதவீதம் சிறப்பாக செயல்படுத்திட ஆன்மிகத்தில் நாட்டமுள்ள சேகர்பாபுவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமித்துள்ளார் மு.க.ஸ்டாலின். அமைச்சர் பொறுப்பேற்றதில் இருந்து ஆலயங்களுக்கு அடிக்கடி சென்று ஆய்வு மேற்கொள்ளும் சேகர்பாபு, ஆக்கிரமிப்பு நில மீட்புப் பணிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிரார். தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்படும் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அர்வங்குறிச்சியில் கரந்தமலை அடிவாரத்தில் உள்ள் வேட்டுய அய்யனார் கோயிலுக்கு சொந்தமன 24 ஏக்கர் 14 சென்ட் நிலம் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் திரு வேட்டுடைய  அய்யனார் கோயில்  ஆணையர் சிவலிங்கம், அறநிலை துறையினர் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் தேக்கு உள்ளிட்ட மரனள் பயிரிடப்பட்டதும் உறுதியானது. இதையடுத்து தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மீட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் அவற்ற கோயில் தொடர்பான ஆவணங்களில் மீண்டும் இடம்பெறச் செய்துள்ளனர். அறநிலையத் துறையினரின் நடவடிக்கைக்கு திண்டுக்கல் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

click me!