பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி... அரசு போட்டிருக்கும் கன்டிஷன்களை தெரிஞ்சிக்கோங்க...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jul 3, 2021, 6:32 PM IST

பழனி முருகன் கோயிலில் வரும் திங்கட்கிழமை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்திருந்த படியே கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதனையடுத்து பழனி முருகன் கோயிலில் வரும் திங்கட்கிழமை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பின் படி,  தமிழக முதலமைச்சரின்செய்தி குறிப்பின் படி பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 05.07.2021 முதல் காலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.  05.07.2021ம் தேதி முதல் பக்தர்களின் நலன் கருதி இத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நினைவரங்கத்தின் வழியாக சென்று படிப்பாதையை அடைந்து தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 

1. பக்தர்கள் செல்லும் வழியில் தெர்மல் ஸ்கேனர் சோதனைக்குட்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

2. 05.07.2021ம் தேதி முதல் திருஆவினன்குடி திருக்கோயிலிலும் ஒருவழிப்பாதையாக சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

3. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

4. திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் 

அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

 5. இணைய வழி (Online) முன் பதிவு அனுமதி சீட்டு உள்ள நபர்கள் மட்டுமே மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இணைய வழி பதிவு இல்லாதவர்கள்  நேரில் வந்தால் இணையவழி பதிவு செய்தவர்கள் வராத பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

6. திருக்கோயிலின் மலைக்கோயிலில் ஒரு மணி நேரத்திற்கு 1000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

7. இத்திருக்கோயிலின் இணையதள முகவரி www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை தேர்வு செய்து அதில் தரிசன முன்பதிவு என்பதை கிளிக் செய்து திருக்கோயில் அமைந்துள்ள மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து திரையில் தோன்றும் இத்திருக்கோயிலுக்கான தரிசன முன்பதிவு உள்ளே சென்று இலவச மற்றும் கட்டண தரிசனத்தில் தங்களுக்கு தேவையான தேதியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!