திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. கொரோனா தொற்று இல்லாத 5 வயது சிறுமிக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு..!

By vinoth kumar  |  First Published Jun 3, 2021, 1:07 PM IST

கொரோனா தொற்று இல்லாமல் கருப்பு பூஞ்சை நோய் பாதித்த 5 வயது சிறுமி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா தொற்று இல்லாமல் கருப்பு பூஞ்சை நோய் பாதித்த 5 வயது சிறுமி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கருப்புப் பூஞ்சை எனும் உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகமான ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் அவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த  மே 30 ம்தேதி வலது கண்ணில் வீக்கம் இருந்தது. இது கோடைக்கால வெயில் தாக்கத்தில் வந்ததாக கருதி வீட்டிலேயே மருத்துவம் பார்த்தனர். ஆனால் கண்ணில் கட்டி கரையவில்லை. சிறுமிக்கு வலியும் குறையவில்லை. 

இதனையடுத்து, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்  அந்த சிறுமிக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து சிறுமிக்கு, அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு இல்லாத 5 வயது சிறுமி கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!