சேர்ந்து வாழவே மனுச்செய்தேன் - நடிகை ரம்பா தரப்பு மறுப்பு

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 06:58 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
சேர்ந்து வாழவே மனுச்செய்தேன் - நடிகை ரம்பா தரப்பு மறுப்பு

சுருக்கம்

நடிகை ரம்பா விவாகரத்து கோரி குடும்ப நலக்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதை நடிகை ரம்பா தரப்பு மறுத்துள்ளது. தாம் சேர்ந்த வாழ கேட்டே குடும்ப நலக்கோர்ட்டில் மனு செய்ததாக ரம்பா தரப்பில் தெரிவித்துள்ளனர்.

‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’, ‘காதலா காதலா’, ‘குயிக் கன் முருகன்’ உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, கன்னடம், மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா. ‘த்ரீ ரோஸஸ்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

இந்த நிலையில், கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவனம், ரம்பாவை தங்கள் கம்பெனி விளம்பர தூதுவராக நியமித்தது. அந்நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பாவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள காரை அன்பளிப்பாக வழங்கினார். இதனால் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்து திருமணம் செய்து கொண்டனர்.

கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பா காதல் திருமணம் கடந்த 2010 ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 8ம்தேதி திருப்பதியில்  நடைபெற்றது. அதன் பின்னர் படத்தில் நடிப்பதை நிறுத்தினார் ரம்பா. 

இந்நிலையில் 5 ஆண்டிலேயே மணவாழ்வு கசந்து போனது  , இதையடுத்து ரம்பா , இந்திரன் இருவரும்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். , இந்நிலையில்  இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள குடும்ப நலகோர்ட்டில் நடிகை ரம்பா சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அது பற்றிய விபரத்தை அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் ரம்பா விவாகரத்து கேட்டு மனு செய்தார் என செய்தி வெளியானது. இதை ரம்பா தரப்பினர் மறுத்துள்ளனர். தாம் விவாகரத்து கேட்டு மனு செய்யவில்லை என்றும் சேர்ந்து வாழ வேண்டும் என கேட்டு  மனு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  இந்த வழக்கு  டிசம்பர்  3ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

ஏற்காட்டில் நடந்த ஏடாகுடம்! ஒன்ஸ்மோர் கேட்ட பார்த்திபன்! காசு இருந்தா மட்டும் தான் சொன்ன சாலா! இறுதியில் அதிர்ச்சி
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்.. இனி 12 மாதமும் சம்பளம், ரூ.2500 ஊதிய உயர்வு.. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு