அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28 ஆம் தேதியே ஊதியம் வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 06:28 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28 ஆம் தேதியே ஊதியம் வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சுருக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வரும் 28 ஆம் தேதியே வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், 28 ஆம் தேதிய சம்பளம் கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிக அரசு ஆணையில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அக்டோபர் மாத ஊதியம் 28 ஆம் தேதியே வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஏற்காட்டில் நடந்த ஏடாகுடம்! ஒன்ஸ்மோர் கேட்ட பார்த்திபன்! காசு இருந்தா மட்டும் தான் சொன்ன சாலா! இறுதியில் அதிர்ச்சி
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்.. இனி 12 மாதமும் சம்பளம், ரூ.2500 ஊதிய உயர்வு.. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு