12ஆம் வகுப்பு கணித தேர்வில் சிபிஎஸ்சி பாட கேள்விகள்..! மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிடுக- ராமதாஸ்

Published : Mar 28, 2023, 02:55 PM IST
12ஆம் வகுப்பு கணித தேர்வில் சிபிஎஸ்சி பாட கேள்விகள்..! மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிடுக- ராமதாஸ்

சுருக்கம்

12-ஆம் வகுப்பு கணிதப்பாடத்தில்  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்  மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

12 ஆம் வகுப்பு கணித தேர்வு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாட பிரிவில் சிபிஎஸ்சி பாடதிட்டத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு கணிதப்பாடத் தேர்வில்  கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள்  தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர்! கணிதப்பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன.

அமைச்சர் மகன்.. சிறைச்சாலை வாசல்.. வைத்திலிங்கம், காமராஜை சேர்த்து வைத்து பேசிய முன்னாள் ஜெ.உதவியாளர்..!

மாணவர்களின் எதிர்காலம்

மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை  எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல! கணிதத்தில் 100% மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100% மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல. வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர்  அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக்கூடாது!

 

கூடுதல் மதிப்பெண் வழங்கிடுக

12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு உரிய அளவில்  கூடுதல் மதிப்பெண்கள்  வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆசிரியர்களுக்கு 4 மாதமாக ஊதியம் இல்லை.! இனியும் காலதாமதம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது- அன்புமணி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !