பாம்பு வாந்தி எடுத்ததாகக் கூறி போலி நவரத்தினம் விற்பனை; பக்தர்களுக்கு விபூதி அடித்த போலி சாமியார்

By Velmurugan sFirst Published Mar 28, 2023, 12:19 PM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பாம்பு வாந்தி எடுத்ததாகக் கூறி போலி நவரத்தின கற்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லவாண்யா. இவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்‌ அலுவலகத்திறக்கு புகார் மனு ஒன்று அளித்துள்ளார். இதில் நாகர்கோவில் களியங்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது 43) நாகர்கோவில் களியங்காடு பகுதியில் நாகராஜ கோவில் ஒன்று தொடங்கினார். அங்கு வரும் பக்தர்களிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்து வந்தேன். ஆன்மீகம் மீது கொண்ட பற்று காரணமாக பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கு வந்தேன்.

இக்கோவிலுக்கு வருவோருக்கு நாக தோஷம் நீங்கும் என்று கூறி பூஜைகள் செய்தார். பாம்புகளுடன் வாழ்வதாகவும், இரவில் பாம்புகள் வாந்தி எடுக்கும் போது மாணிக்க கற்கள் கிடைத்ததாகவும் எங்களிடம் கூறினார். அந்த கற்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும் எனவும் தெரிவித்தார். பக்தர்களிடம் அந்த கற்களை கட்டாயப்படுத்தி வாங்க வைத்தார்.

கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்திய இளைஞர் சுட்டுக் கொலை

இதன்மூலம் லட்சக்கணக் கில் அவருக்கு பணம் கிடைத்தது. இதன்மூலம் குறுகிய காலத்தில் சொகுசு கார்கள், பங்களாக்கள் கட்டினார். ஆனால் பூசாரி கொடுத்த நவரத்தின கற்கள், மாணிக்க கற்களை வாங்கி சென்றவர்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. அவர்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். இதுபற்றி பூசாரியிடம் கூறிய போது தன்னிடம் உள்ள ஸ்படிக லிங்கத்தை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், இன்னல்கள் அகலும் என்றார். அந்த ஸ்படிக லிங்கம் ரூ.75 ஆயிரம் எனவும் தெரிவித்தார்.

இதனை நம்பி ஏராளமான பெண்கள் ஸ்படிக லிங்கத்தை வாங்கி சென்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் அவர் மோசடி கற்களை கொடுத்து ஏமாற்றினார். பூசாரியின் மோசடி தெரியவந்ததால் நாங்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்த்தோம். இந்த நிலையில் எங்களின் தந்தை உடல் நலக்குறைவால் இறந்தார். ஆனால் பூசாரியை நம்பாமல் இருந்ததாலேயே எங்களின் தந்தை இறந்தார் என்று அவர் கூறிவருகிறார். மேலும் எங்களை தீர்த்து கட்டிவிடுவதாகவும் கூறிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக்ததில் இணையதளம் வாயிலாக பாதிக்கபட்ட பெண்கள்  புகார் மனு கொடுத்தனர்.

தந்தையைின் சடலத்திடம் ஆசி பெற்று தேர்வு எழுதச்சென்ற மாணவன்; திண்டுக்கலில் நிகழ்ந்த சோகம்

இந்த மனு மீது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம்  குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!