சந்தையில் மின்சாரம் வாங்க தமிழகத்திற்கு தடை..! மின் தடை ஏற்பட வாய்ப்பு..? அதிர்ச்சி அளிக்கும் ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Aug 19, 2022, 10:37 AM IST

சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


மின்சாரம் வாங்க தமிழகத்திற்கு தடை

தமிழகத்தில் மின்சார தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் தமிழக அரசு உற்பத்தி செய்து வருகிறது. இதன் காரணமாக வெளி சந்தையில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.. இந்தநிலையில்  டிஸ்காம்ஸ் சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்கங்களுக்கு பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் சார்பில் மின்சாரத்துக்கு பணம் செலுத்தாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. நிலுவை தொகையை செலுத்தாததால், தமிழகம், தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக  மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியை செலுத்தத் தவறியதால், மின்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் பின்னடைவு ஆகும்! 

Tap to resize

Latest Videos

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது- இபிஎஸ்

மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும்

தமிழகத்தின்  தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது! தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக் கூடும்! மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும்! என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஷாக்கிங் நியூஸ்.. மின்சாரம் வாங்க தடை.. தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்..!

 

click me!