ஷாக்கிங் நியூஸ்.. மின்சாரம் வாங்க தடை.. தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்..!

By vinoth kumar  |  First Published Aug 19, 2022, 7:09 AM IST

நிலுவை தொகையை செலுத்தாததால், தமிழகம், தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


நிலுவை தொகையை செலுத்தாததால், தமிழகம், தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இதையடுத்து டிஸ்காம்ஸ் சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்கங்களுக்கு பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் சார்பில் மின்சாரத்துக்கு பணம் செலுத்தாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. நாளை இந்த பகுதிகளில் 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!

ஆகையால், தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஆகஸ்ட் 19ம் தேதியான இன்று முதல் மின்சார வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மின் தடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மின்சாரம் விநியோக நிறுவனங்கள்(discoms) மற்றும் மின்சாரம் உற்பத்தி நிறுவனங்கள்(gencos) நிலுவைத் தொகையை செலுத்தாததற்காக மின் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட விதிகளின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

புதிய லேட் பேமென்ட் சர்சார்ஜ் (எல்பிஎஸ்) விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வரும். இதில் தெலங்கானா அதிகபட்சமாக ரூ.1,380 கோடி பாக்கியும், தமிழ்நாடு ரூ.926.16 கோடி பாக்கியும், கர்நாடகா 355.2 கோடி, மகாராஷ்டிராவில் 381.66 கோடி பாக்கி வைத்துள்ளது. 

இதையும் படிங்க;- தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இருக்குமா ? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல் !

click me!