வருகிறது புதிய சட்டம்.. பேருந்துகளில் இப்படியெல்லாம் நடந்துக்கொள்ளும் ஆண்களை இறக்கிவிடுங்கள்.. அரசு உத்தரவு

By Thanalakshmi V  |  First Published Aug 18, 2022, 5:22 PM IST

பேருந்துகளில் பெண்களை முறைத்துப் பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 


தமிழ்நாட்டில் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் காலம் காலமாக இருந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில், புதிய விதிகளை சேர்த்து திருத்தப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க:ரூ.43,000 சம்பளத்தில் ஆவினில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? நேர்காணல் எப்போது..? முழு விவரம்

Tap to resize

Latest Videos

புதிய விதிகளில்,  ''பெண்களை ஆண்கள் முறைத்து பார்க்க கூடாது, பெண்களை பார்த்து கூச்சலிடுதல் கூடாது, பாலின் ரீதியாக சைகை காட்ட கூடாது, பெண்களை புகைப்படம் எடுக்க கூடாது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை நடுத்துனர் எச்சரித்த பின்னர், பேருந்துகளில் இருந்து இறக்கிவிடலாம். 

மேலும் படிக்க:படியில் தொங்கி மாணவர்கள் ரகளை.. நடத்துனர் கண்டித்ததால் பேருந்து கண்ணாடியை உடைத்து அட்டூழியம்..

நடத்துனர் அறிவுரையை மீறும் ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு இன்று அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

click me!