பயப்படாமல் ஆட்டத்தை தொடங்கிய ராமமோகன் ராவ் – மத்திய அரசை எதிர்க்க முடிவு

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
பயப்படாமல் ஆட்டத்தை தொடங்கிய ராமமோகன் ராவ் – மத்திய அரசை எதிர்க்க முடிவு

சுருக்கம்

பெரும் சிக்கலில் சிக்கயுள்ள ராமமோகன் ராவ், கடந்த வாரம் தமிழகத்தின் உச்ச அதிகாரியான தலைமை செயலாளர். ஆனால், இன்று நம்மை போன்று சாதாரண மனிதர் மட்டுமல்ல, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறையின் பிடியில் சிக்கி விழி பிதுங்கி உள்ளவர்.

மத்திய அரசு தனது அஸ்திரத்தை எய்தவுடன், ராமமோகன் ராவ், அவருடன் இருந்தவர்கள் அனைவரும் ஆடிப்போய்தான் உள்ளார்கள். ஆனால், 2 நாட்களுக்குள் சுதாரித்து கொண்ட ராமமோகன் ராவ், தனது டிபன்ஸ் கேம்மை தொடங்கிவிட்டார்.

விஷயம் தலைக்குமேல் சென்று விட்டதால், இனிமேல் பணிந்து போவதில் தனக்கு பயனில்லை என புரிந்து கொண்டார் ராமமோகன் ராவ். எனவே தான், வேறு வழியில்லாமல் மத்திய அரசையும், ஓ.பி.எஸ்.சையும் பிடிபிடி என பிடித்தார். தொடர்ந்து எதிர் கேள்விகளும் எழுப்பினார்.

தமிழக அரசின் அதிகார மையத்தில் உள்ளவர்களின் முழுமையான ஆதரவு ராமமோகன் ராவுக்கு இருப்பதால், தைரியமாக அவர் எகிறி அடிப்பதாக தெரிகிறது. அடுத்த கட்டம் நடவடிக்கைதான் என உறுதியாகிவிட்டதால், தனது பேட்டியில் ராமமோகன் ராவ், அரசியலையும் இழுத்துவிட்டுள்ளார்.

அதாவது மக்கள் செல்வாக்கு மிக்க ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோரையும் தனது பேட்டியின்போது சேர்த்து கொண்டார். ஒ.பி.எஸ்.க்கு எதிர் முகாமில் இருப்பவர்களின் ஆதரவு, முழுமையாக ராம்மோகன் ராவுக்கு கிடைத்து இருப்பதால், அவர் முழுவீச்சில் மத்திய அரைசை எதிர்க்க தொடங்கியுள்ளார். இதல் இருந்தே தெரிகிறது. ராமமோகன் ராவ் தனது தடுப்பு ஆட்டைத்தை தொடங்கிவிட்டார் என்று.

PREV
click me!

Recommended Stories

விஜயின் கிறிஸ்தவ வாக்குகளில் வேட்டு வைத்த ஸ்டாலின்..! திமுகவின் அதிரடி வியூகம்..!
ஈரோட்டில் பரபரப்பு.. லாரியை சுத்துப்போட்ட போலீஸ்.. சோதனையில் அதிர்ச்சி.. அலறிய 5 பேர்..