" என் உயிருக்கு ஆபத்து " : ராம மோகன ராவ் " டென்ஷன் பேட்டி "

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
" என் உயிருக்கு ஆபத்து "  :   ராம மோகன ராவ்  "  டென்ஷன்  பேட்டி "

சுருக்கம்

மத்திய அரசு என்னை குறி வைத்துள்ளதால் என் உயிருக்கு ஆபத்து : ராம மோகன ராவ் பரபரப்பு பேட்டி

வருமான வரி சோதனை குறித்து மனம் திறந்து பேசுவதாக முன்னாள் தமிழக தலைமை செயலர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர் தன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை கண்டித்த ராகுல்காந்தி மற்றும் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வீட்டில் வருமான வரித்துறை எடுத்த ஆவணங்களை காட்டினார் ராம மோகன ராவ். என்னை மத்திய போலீஸ் வீட்டு காவலில் வைத்தது என்றும், என் மீது நடந்த சோதனை அரசியல் சட்டவிரோதம் என ராவ் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் நான் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தலைமை செயலர் நான் என்றும், சோதனை வாரண்டை என்னிடம் போலீஸ் காட்டியதாகவும், ஆனால் அதில் என் பெயர் இல்லை என்றும் ராம மோகன ராவ் தெரிவித்தார். என் மகன் விவேக் தனியாக வசிப்பதாகவும் அவர் தெரிவித்தார். என் வீட்டில் ரூ.1.12 லட்சம் மட்டுமே என் வீட்டில் இருந்து எடுத்துள்ளதாகவும், எனது மகள் மற்றும் மனைவி நகைகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் ராம மோகன ராவ் விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் என் வீட்டில் எந்த விதமான தவறான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், என் மகன் பெயரிலான வாரண்டை எடுத்து கொண்டு தலைமை செயலர் அறையை சோதித்ததாகவும் ராம மோகன ராவ் குற்றம் சாட்டினார்.  முதலமைச்சர், உள்துறை செயலாளரிடம் எதுவும் சொல்லாமல் தலைமை செயலகத்தில் சோதனை நடைபெற்றதாகவும் ராவ் விளக்கம் அளித்தார். அரசின் ரகசிய கோப்புகள் மட்டுமே எனது அறையில் உள்ளதாகவும், தலைமை செயலர் அறையில் நுழைய மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.

PREV
click me!

Recommended Stories

பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
3000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு