“என்னை யாரும் அசைக்க முடியாது, இன்றும் நான் தான் தலைமை செயலாளர்” – ராமமோகன் ராவ் கொக்கரிப்பு

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 11:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
“என்னை யாரும் அசைக்க முடியாது, இன்றும் நான் தான் தலைமை செயலாளர்” – ராமமோகன் ராவ் கொக்கரிப்பு

சுருக்கம்

எனது மகன் விவேக் தனியாக வசிக்கிறார். ஆனால், வருமான வரித்துறையினர் அவர் வீட்டில் சோதனை நடத்தாமல், என் வீட்டில் சோதனை நடத்தினர். எனது பெயர் இல்லாத பட்சத்தில் எப்படி, என் வீட்டில் சோதனை நடத்தலாம்.

என்னிடம் விசாரணை நடத்துவதாக இருந்தால், என்னை பணியிடமாற்றம் செய்த பின்னர், விசாரிக்க வேண்டும். அதைவிடுத்து எப்படி என்னை தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்க முடியும். எனக்கு எவ்வித விளக்கமும் அளிக்காமல் புதிய தலைமை செயலாளரை நியமித்துள்ளனர். அது செல்லாது. இன்றும் நான் தான் தலைமை செயலாளர். என்னை யாரும் அசைக்க முடியாது.

32 ஆண்டுகள் அனுபவம் உள்ள அதிகாரியிடம், வருமான வரித்துறையினர் இப்படி நடந்து கொள்வதற்கு யார் அனுமதி அளித்தது. எனது வீட்டில் சோதனை நடத்தியபோது, தமிழக அரசு ஏன் தயங்கியது. தலைமை செயலகத்தில் சோதனை செய்ய, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் வழங்கியது.

PREV
click me!

Recommended Stories

மிருணாள் தாகூருடன் டும்..டும்..டும்... தேதி குறித்த குடும்பம்... தனுஷின் புதுப்புது அர்த்தங்கள்..!
வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!