
முன்னாள் தலைமைச் செயலாளர் வீடு மற்றும் அலுவலகம், மகன் விவேக் வீடு என 13 இடங்களில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராம்மோகன் ராவ் வகித்து வந்த தலைமைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ்,தற்போதும் நான்தான் தலைமைச் செயலாளர் என கொக்கரித்தார். எனக்கு இட மாறுதல் இட மாறுதல் உத்தரவை தமிழக அரசால் பிறப்பிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்? புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் கிரிஜா வைத்தியநாதன், தலைமைச் செயலாளர் பொறுப்பு மட்டுமே வகிப்பதாக தெரிவித்தார்.
எனது வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமானவரித் துறையினர் துணை ரானுவத்தின் உதவியுடன் சோதனை நடத்திய போது ஓபிஎஸ் தலைமையிலான அரசு என்ன செய்து கொனடிருந்தது என்றும் ஆக்ரோசமாக கூறினார்.
என்னை வேறு இடத்திற்கு மாற்றம் செய்துவிட்டு சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் ராம மோகன ராவ் தெரிவித்தார்.
ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமைச் செயலகத்துக்குள் நுழையும் தைரியம் யாருக்கு வந்திருக்கும்? என்றும் சவால் விட்ட ராம மோகன ராவ், என்னை தலைமைச் செயலாளர் ஆக்கியது புரட்சித் தலைவி ஜெயலலிதாதான் என்றும், அவரது வழிகாட்டுதலின் படியே தான் நடந்து வந்ததாகவும் கூறினார்.