மகனை பற்றி மனம் திறந்த ராம் மோகன் ராவ்

First Published Dec 30, 2016, 5:45 PM IST
Highlights


தனது மகன் என்ன பிஸ்னெஸ் செய்கிறார் , என்ன செய்கிறார் எனபது குறித்தும் , தான் தலைமை செயலாளராக் இருப்பதால் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சொன்னதாக தினசர் பேப்பர் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

விவேக் ராம் மோகன் ராவின் நிறுவனமான ஸ்வான் நிறுவன மேலாளர் பாஸ்கர்நாயுடுவின் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனை , தமிழ்நாடு சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளில் ரூ 500 கோடிவரை காண்ட்ராக்ட் எடுத்ததாக புகார் எழுந்தது. 

ஆனால் தான் தலைமை செயலாளராக இருப்பதால் விதியை மீறி எதையும் செய்ய கூடாது என அறிவுறுத்தியதாக பேட்டியில் கூறியுள்ளார். 

அவரது பேட்டி :

கே: உங்கள் மகன் என்னதான் பிசினஸ் செய்கிறார்?

அவர், பெரிய நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அது தவிர எங்களின் பூர்வீக தொழில்களான நிலக்கரி உட்பட சரக்குகளை கொண்டு செல்வது, துறைமுகங்களில் சரக்குகளை கையாளுதல் என சில தொழில்களை செய்து வருகிறார். அதற்கு அவரது மாமனார் குடும்பம் உறுதுணையாக இருக்கிறது.

கே: தலைமைச் செயலாளர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் உங்களை வைத்து பல வர்த்தக நடவடிக்கைகளில் உங்கள் மகன் ஈடுபட்டதாக சொல்கிறார்களே?

ப: அரசு பதவியில் இருக்கும் வரை என்னிடம் எந்த வர்த்தக தொடர்புக்கும் வரக்கூடாது என்று கண்டிப்பாக அவரிடம் கூறி விட்டேன். அதன்படியே அவர் செயல்பட்டார். மாநில அரசுக்கும், என் மகனின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் எந்தவித தொடர்பும் இருந்ததில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

click me!