சேகர் ரெட்டி எனக்கு தெரிந்தவர்தான் - ராம் மோகன்ராவ் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
சேகர் ரெட்டி எனக்கு தெரிந்தவர்தான் - ராம் மோகன்ராவ் பரபரப்பு

சுருக்கம்

சர்ச்சையை கிளப்பியுள்ள சேகர் ரெட்டி விவகாரத்தில் அவருடன் தொடர்பில் இருப்பதாக விவேக் ராம்மோகன் ராவ் மற்றும் மோகன் ராவ் மீது புகார் எழுந்தது. சேகர்ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியின் .ஆவணங்களின் அடிப்படையில் தான் ராம் மோகன்ராவின் வீட்டிலேயே சோதனை நடாத்தப்பட்டது என்று வருமானவரித்துறை தெரிவித்திருந்தது.

தனக்கு எதிராக சதி உள்ளது என்று பேட்டி அளித்திருந்த ராம் மோகன் ராவ் தனக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருந்தது என்பதை பேட்டியில் ஒப்புகொண்டுள்ளார்.

தமிழ் செய்திதாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: 

கே: சேகர் ரெட்டி அடிக்கடி தலைமைச் செயலகத்துக்கு வந்து போனதாகவும், உங்களை சந்தித்தாகவும் சொல்கிறார்களே? அவருக்கும் உங்களுக்குமான உறவுதான் என்ன?

ப: தலைமைச் செயலகத்திற்கு அவர் யாரை பார்க்க வேண்டுமானாலும் வந்திருக்கலாம். என்னையும் பார்ததிருக்கலாம். அவர் எனக்கு தெரிந்தவர் தான். என் வீட்டுக்கும் வந்திருக்கிறார். அவருக்கும்–எனக்கும் எந்த வரவு செலவும் கிடையாது. என்னுடைய மகனுக்கும் கிடையாது. வருமான வரித்துறையின் என் வீட்டுக்கு சோதனைக்கு ஏன் வந்தார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். இது முழுக்க முழுக்க சதி.

PREV
click me!

Recommended Stories

தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து.. அலறிய 55 பயணிகள் நிலை என்ன?
ஹேப்பி நியூஸ்! ஊதியம் உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?