"நேர்மையாக உள்ளவர்களுக்கு ஆவேசம் வரும்" - தமிழிசைக்கு ராம்மோகன்ராவ் பதிலடி

First Published Dec 30, 2016, 5:16 PM IST
Highlights


ராம் மோகனராவின் சர்ச்சைக்குரிய பேட்டி பற்றி கருத்து கூறிய பாஜக தலைவர் தமிழிசை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் நாலு நாளில் சுறுசுறுப்பாக எப்படி இப்படி பேட்டி கொடுக்க முடிகிறது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழக மக்களின் பிரதிநிதி ராம்மோகன் ராவ் கிடையாது, அவருக்கு பேட்டி அளிக்க எந்த உரிமையும் இல்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ராம்மோகனராவ் நேர்மையாக் உள்ளவர்களுக்கு ஆவேசம் வரத்தான் செய்யும் என்று கூறியுள்ளார்.

செய்தி தாள் ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யோகபேட்டி:

கே: ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர், 4 நாளில் இவ்வளவு ஆவேசமாக பேசுகிறாரே? இத்தனை நாள் ஏன் மவுனமாக இருந்தார்? என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனரே?

ப: அரசு சம்பளம் வாங்குபவன் என்றாலும் நானும் சராசரி மனிதன் தான். அடித்தால் பொறுத்துக் கொண்டு போக முடியாது. ‘ எதையும் தைரியமாக சந்திக்க வேண்டும்’ என்றுதான் மத்திய அரசின் ஐஏஎஸ் அகாடமியில் எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்காக மத்திய, மாநில அரசுகளின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் எண்ணம் இல்லை. 

தமிழிசை என்னைப் பற்றி சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறதோ அதுபோல சராசரி மனிதனாக நானும் பதில் சொல்ல முடியும். என்னுடைய கருத்தை சொல்வதற்கு ‘கான்ஸ்ட்டிடியூசனல் ரைட்ஸ்’ இருக்கிறது. நேர்மையாக உள்ளவர்களுக்கு ஆவேசம்... கோபம் இருக்கத்தான் செய்யும். மீடியாக்களில் என்னைப் பற்றி தவறுதலாக தகவல்கள் வெளியான சூழலில் என்னுடைய மனித உரிமையை காப்பாற்றவும், என்னுடைய குடும்ப வாழ்க்கை, மரியாதையை காப்பாற்றவுமே வெளியே வந்து பேசினேன்.

click me!