'மணல் கொள்ளையராகவே மாறிவிட்ட ராம்மோகன் ராவ்' - எங்கும் நடக்காது கொடுமை இது…!!!

First Published Dec 24, 2016, 9:57 AM IST
Highlights


ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம், ஓங்கோலை சேர்ந்தவர் ராமமோகன் ராவ். படித்து பட்டம் பெற்று அரசு அதிகாரி ஆனவர்.

மெத்த படித்தவர்கள்  அறிவாளியாகவும், ஒழுக்க சீலராகவும் இருப்பது பொதுவான கருத்து. ஆனால், ஒழுக்கத்தை காற்றில் பறக்ககவிட்டு, ஒரு அதிகாரி எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதராணமாக வாழ்ந்துள்ளார் ராமமோகன் ராவ்.

அரசியல்வாதிகளே வாய் பிளக்கும் அளவுக்கு லஞ்சம், லாவண்யம், ஊழல்களில் திளைத்துள்ளார் என்ற பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1985ம் ஆண்டு பேட்ஜில் ஐ.ஏ.ஸ். ஆன ராமமோகன் ராவ், படிப்படியாக வளர்ந்து, பாலாறு படர்ந்து ஓடும் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் 1994 முதல் - 96ம் ஆண்டு வரை கலெக்டராக இருந்துள்ளார்.

அப்போதுதான் மண் என்பது ஒரு இலவசமாக பணம் கொட்டும் தங்கம் என புரிந்து கொண்டார். அப்போது முதல் மணல் கொள்ளை, மணல் வியாபரம் குறித்து அனைத்து தகவல்களையும் மனதில் ஏற்றி கொண்டார்.

படிப்படியாக வளர்து முதலமைச்சரின் செகரெட்ரிகளில் ஒருவராக மாறிவிட்ட ராமமோகன்ராவ், தனது சுய லாபத்துக்காக மணல் கொள்ளையடிக்க திட்டம்போட்டு, பல காரியங்களை நிறைவேற்றினார். அந்த நேரத்தில் திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் கொடி கட்டி பறந்த மணல் ஆறுமுகசாமியை, கட்டம் கட்டினார்.

பொதுவாக ஊழல் செய்யும் அதிகாரிகள், ஒரு கான்ட்ராக்டரிடமோ, தொழிலதிபரிமோ ஒரு வேலையை எடுத்து கொடுத்துவிட்டு கமிஷன் வாங்கி கொள்வது வழக்கம். ஆனால், ராம்மோகன் ராவ் மூளையோ வேறு மாதிரி சிந்தித்துவிட்டது.

எதேற்கு கமிஷன் கொடுக்க வேண்டும். அந்த வேலையை நாமே செய்தால், அதிக லாபம் பெற்றுவிடலாமே என சிந்தித்ததன் விளைவுதான், ‘புதிய படையப்பா’ போல் ஒரே பாட்டில் உருவானார் சேகர் ரெட்டி.

வாலாஜா - வேலூர் ஆறுகளில் சிறிய அளவில் மணல் எடுத்து கொண்டிருந்த சேகர் ரெட்டி, ராம்மோகன் ராவின் பினமி ஆனார்.

சேகர் ரெட்டியின் முதலீட்டுக்கு தேவையான பணத்தை ராமமோகன் ராவே கொடுத்து, பல ஆயிரம் கோடி ரூபாய் புரளும் மணல் குவாரி எடுத்தார். இதில் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் அடங்குவர்.

சேகர் ரெட்டி வெறும் பினாமி மட்டும்தானாம். இதில் வேடிக்கை என்னவென்றால், மாதம் மாதம் ரூ.120 கோடி கார்டனுக்கு கொடுத்துவிட வேண்டுமாம். மற்றவை பற்றி கார்டன் கண்டுகொள்ளாது என்பதுதான் “ஹைலைட்.” மேலிடத்துக்கு மாதம் மாதம் ரூ.120 கோடி சரியாக வந்துவிட்டதால், அவர்களும் கண்டு கொள்ளவில்லை.

நாட்டு மக்களுக்காக திட்டங்களை தீட்டி, அதை சரிவர செயல்படுத்த கூடிய முக்கிய கடமை, அரசின் உச்ச அதிகாரிகளுக்கு உண்டு. அதையொல்லாம் விட்டு விட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள், பணம் ஆகியற்றை சேர்ப்பதற்காக ராம்மோகன் ராவ் நேரத்தை செலவிட்டதும், தமிழகத்தின் வளத்தை சுரண்டியதும், இப்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஊழல் செயயும் அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகள் ஒத்து ஊதாமல் இருந்தாலே, பாதிக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் தவறு செய்ய பயப்படுவார்கள். ஆனால், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் போட்டி போட்டு கொண்டு கூட்டு கொள்ளையடித்து நாட்டையே சுரண்டும் அவலம், கொடுமை, கேவலம் உலக்த்திலேயே தமிழகத்தில் தான், நடைபெறுகிறது என வயிற்றெரிச்சலோடும், வேதனையோடும் தெரிவிக்கிறார். நேர்மையோடு பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரி ஒருவர்.

click me!