மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தேதி அறிவிப்பு..! தமிழகத்தில் 6 இடங்களுக்கு தேர்தல்

Published : Feb 18, 2026, 11:14 AM IST
Rajya Sabha

சுருக்கம்

தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற மார்ச் 16ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 10 மாநிலங்களில் 37 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற மார்ச் மாதம் 16ம் தேதி நடத்தப்பட உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகின்ற 26ம் தேதி தொடங்கி மார்ச் 5ம் தேதி வரை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

16ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வேட்புமனுக்களை மார்ச் 9ம் தேதி வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, செல்வராசு, தம்பிதுரை, ஜி.கே.வாசன் உள்ளிட்டோரின் பதவி காலம வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி நிறைவு பெற உள்ளது.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பார்க்கும் பொழுது அதிமுக சார்பில் 4 உறுப்பினர்களும், திமுக சார்பில் 2 உறுப்பினர்களும் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விவசாயிகளுக்கு ரூ. 4,00,000 ஊக்கத்தொகை! அதுமட்டுமல்ல! ரூ.3.25 கோடி மதிப்பில் வேளாண் கருவிகள்.!
குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! உச்சத்தை தொட்டதா காய்கறிகளின் விலை?