மேனாமினுக்கி பட்ஜெட்..! இத்தோடு திமுக ஆட்சிக்கு முடிவு..! எடப்பாடி சூளுரை..!

Published : Feb 17, 2026, 03:38 PM IST
Stalin vs Eps

சுருக்கம்

கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினுக்கி உரையாக இருக்கிறதே தவிர, உருப்படியாக எதுவும் இல்லை.

‘‘வெளியே அழகாக இருக்கும். புட்டுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும் அத்திப்பழமாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது’’ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு இன்று எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். ‘‘இன்றைய தினம் திமுக அரசு 2026-27 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டி வதைத்த, திராவிட மாடல் என்ற பெயரால் நடத்தப்பட்ட ஏமாற்று மாடல் திமுக அரசு தனது கடைசி பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

இன்று காலை நாங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாபெரும் காதுகுத்து விழா அழைப்பிதழை அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அளித்திருக்கிறோம். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எந்த அளவுக்கு இந்த அரசு மக்களுக்கு காது குத்தியது என்பதை நாட்டு மக்களும் அறியவேண்டும் என்பதற்காக இந்த அழைப்பிதழை உங்களிடம் கொடுத்திருக்கிறோம். நீங்கள் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது உங்கள் கடமை.

2021-ம் ஆண்டு திமுக சட்டமன்றத் தேர்தலின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதுவரை நான்கில் ஒரு அறிவிப்பைக்கூட நிறைவேற்றவில்லை. அதில் முக்கியமான பல அறிவிப்புகள். இன்றைக்கு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள். ஆனால் அதற்கு மாறாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைத்தான் அறிவித்திருக்கிறார்கள். அரசு ஊழியர்களையும் இந்த அரசு ஏமாற்றிவிட்டது.

அதோடு பல துறைகளில் பணிபுரிகின்ற அலுவலர்களுக்கு பல்வேறு உறுதிமொழி அளித்தார்கள். சத்துணவு அமைப்பாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். நிறைவேற்றவில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். நிறைவேற்றவில்லை. செவிலியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் நிறைவேற்றவில்லை. இப்படி பல துறைகளில் இருக்கின்ற அலுவலர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எல்லோருமே போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகமே போராட்டக்களமாக இன்றைக்கு மாறியிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினுக்கி உரையாக இருக்கிறதே தவிர, உருப்படியாக எதுவும் இல்லை. மொத்தத்தில் விடியா திமுகவின் நிதிநிலை அறிக்கை அத்திப்பழம் போல உள்ளது. வெளியே அழகாக இருக்கும். புட்டுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும் அத்திப்பழமாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது..’’ என்றார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Supplementary Examination: மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா? கவலை வேண்டாம்! துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?
Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!