SC Perarivalan released Updates: விடுதலை கேட்டு ஆனந்த கண்ணீர் விட்ட அற்புதம்மாள்..பாசப்போராட்டம் வென்ற தருணம்

Published : May 18, 2022, 12:15 PM IST
SC Perarivalan released  Updates: விடுதலை கேட்டு ஆனந்த கண்ணீர் விட்ட அற்புதம்மாள்..பாசப்போராட்டம் வென்ற தருணம்

சுருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்திவந்த அவரது தாயார் அற்புதம்மாளின் பாச போராட்டம் இன்று வென்றுள்ளது. 

முன்னதாக ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ராஜூவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161 பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதபடுத்தினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கிறது பிரிவு 142. மாநில அரசு முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. மாநில அமைச்சரவையின் முடிவை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்திகிறாரோ என்பதை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பேரறிவாளன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: Perarivalan Case: பேரறிவாளன் விடுதலை சாத்தியமானது எப்படி..! உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.. முழு விவரம்..

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை அவரது குடும்பத்தினர் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் தந்தை ஆகியோர் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டனர். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டம் ஜொலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், இன்றைக்கு கிடைத்துள்ள இந்த விடுதலை எனது தாயாருக்கு கிடைத்துள்ள மிக பெரிய வெற்றி. அவரது வலிக்கும் போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி. நல்லவர்கள் வாழவேண்டும். தீயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நியதி.  என் பக்கம் இருந்தது உண்மையும் நியாமுமே. 

நல்லவருக்கு விளையும் கேடு போல தான் என்னுடைய சிறைவாசம். பேரறிவாளன் ஒரு நிரபராதி. அவரது வாக்குமூலத்தை நான் தவறாக பதிவு செய்துவிட்டேன் என்று விசாரணை அதிகாரி ஐபிஎஸ் தியாகராஜன் கொடுத்த வாக்குமூலம் எனது வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. 2011 ல் சகோதரி செங்கோடியின் உயிர் தியாகம் அளப்பரியது. இந்த போராட்டம் எங்களுடையது மட்டுமல்ல. பலருடையது என்று அவர் தெரிவித்தார். மேலும் பேரறிவாளன்  விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Perarivalan Case: பேரறிவாளன் விடுதலை சாத்தியமானது எப்படி..! உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.. முழு விவரம்..

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!