ஒரே ஒரு அரசாணை போதும்..! மீதமுள்ள 6 பேரும் அரை மணி நேரத்தில் விடுதலை..? மூத்த வழக்கறிஞர் கூறும் அதிரடி தகவல்

By Ajmal KhanFirst Published May 18, 2022, 12:05 PM IST
Highlights

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியுள்ள நிலையில், ஒரே ஒரு அரசாணை போட்டால் போதும் 6 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என மூத்த வழங்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 

31 ஆண்டு கால வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 31 வருடமாக சிறையில் இருந்து வருகின்றனர். இந்த 7 பேரையும் விடுவிக்க அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து மத்திய அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தன்னை விடுவிக்கும் படி பேரறிவாளன் தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ளது. அரசியலமைப்பு 142 ஐ பயன்படுத்தி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது 

6 பேரும் எப்போது விடுதலை?

இந்த  தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகின்றனர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் பினையில் இருந்த பேரறிவாளனை சந்தித்து ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, இந்த தீர்ப்பு வழக்கறிஞர்களை பெருமைப்படுத்தும் தருணம் எனக் கூறினார். ஆளுநர்கள் உத்தரவுகளை மீறியதை சுட்டுக்காட்டி வெளியாகியுள்ள இரண்டாவது தீர்ப்பு எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே கர்நாடகத்தில் பெரும்பாண்மை இல்லாத எடியூரப்பாவை முதல்வராக்கி பெரும்பாண்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்கிய நிலையில் அதனை தடுத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக தெரிவித்தார். அப்படி பட்ட நிலையில் மீண்டும் தீர்ப்பு வந்துள்ளதாக தெரிவித்தார்.

அரசாணை போட்டால் உடனே விடுதலை

பேரறிவாளன் வழக்கில் 100க்கு 95% சதவிகிதம் இது போன்ற தீர்ப்பு தான் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கில் மத்திய அரசு மேல் முறையீடு செய்ய முடியாது என தெரிவித்தவர், இந்த வழக்கில் மத்திய அரசிற்க்கு அதிகாரம் இல்லையென நீதிமன்றம் கூறியுள்ளதன் மூலம் மீதமுள்ள 6 பேரையும் உடனடியாக விடுவிக்கலாம் எனக்கூறினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா  நிறைவேற்றிய அமைச்சரவை தீர்மானத்தை சுட்டிக்காட்டி ஒரே ஒரு அரசாணை போட்டால் போதும் மதியத்திற்குள் 6 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனக்கூறினார்.  எனவே தமிழக அரசு 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

2014 உச்சநீதிமன்ற தீர்ப்பு முதல் இன்று வரை நடந்தது என்ன? பேரறிவாளின் 31 ஆண்டுகளாக சிறைவாசம் முடிவுக்கு வந்தது

click me!