
பாபா முத்திரையுடன் கூடிய உறுப்பினர் படிவத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் ரஜினி
தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம் என்றும்,என்னுடைய அரசியல் அறிவிப்பை வரவேற்ற அனைவருக்கும் நன்றி என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் மன்றத்தில் உள்ளவர்கள், மன்றத்தில் இல்லாதவர்களை ஒருங்கிணைக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்றும்,தனது மன்றத்தில் பதிவு செய்ய ரசிகர்களுக்கு வீடியோ மூலம், ட்விட்டரில் ரஜினி அழைப்பு விடுத்துள்ளார்.
ரசிகர்கள் அல்லாதவர்களையும் ஒருங்கிணைக்க நடிகர் ரஜினி புதிய இணையதளம் உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini Mandram என்ற மொபைல் செயலியையும்,இணையதளமும் அறிமுகம் செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் வர முடிவு செய்த பின்னர், ஒவ்வொரு நாளும் பல முக்கிய தகவலையும், அதிரடி நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
கட்சி சின்னமா?
பாபா முத்திரையுடன் கூடிய உறுப்பினர் படிவத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் ரஜினி.எனவே, கட்சியின் சின்னம் பாபா முத்திரை தானா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதே போன்று ராமகிருஷ்ணா மடம் சிம்பல் போன்றே,பாபா முத்திரை மீது,மேல் பக்கம் பாம்பு சிம்பல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.