சிறுமி ஹாசினி கொலை வழக்கு - தஷ்வ்ந்த் நீதிமன்றத்தில் ஆஜர்...!  10 சாட்சிகளிடம் விசாரணை..!

 
Published : Jan 02, 2018, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
சிறுமி ஹாசினி கொலை வழக்கு - தஷ்வ்ந்த் நீதிமன்றத்தில் ஆஜர்...!  10 சாட்சிகளிடம் விசாரணை..!

சுருக்கம்

Tashwant was produced in a Chengalpattu court in the case of the girls hassini murder case.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார். சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நீதிபதி முன்னிலையில் 10 சாட்சிகளிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையை அடுத்த மாங்காட்டில் வசித்த தஷ்வந்த் 7 வயது சிறுமி ஹாசினியை, கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொடூரமாக கொலை செய்தான். 

இதையடுத்து போலீசார் தஷ்வந்தை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஆனால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் கடந்த செப்டம்பர் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவனை ஜாமீனில் விடுவித்தது. 

இதைதொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், பணத்துக்காக தனது தாயையும் கொலை செய்துவிட்டு தப்பியோடினான். அவனை மும்பையில் போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், தஷ்வந்த், ஹாசினி கொலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நீதிபதி முன்னிலையில் 10 சாட்சிகளிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்துகள்.. காவு வாங்கப்பட்ட 9 உயிர்கள்.. அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்
தமிழகத்தையே உலுக்கிய விபத்து.. அரசு பேருந்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு!