இலங்கையின் அதிபராக மீண்டும் ராஜபக்சே வர வேண்டுமாம்...! சொல்வது சு.சுவாமி!

Asianet News Tamil  
Published : Feb 12, 2018, 06:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
இலங்கையின் அதிபராக மீண்டும் ராஜபக்சே வர வேண்டுமாம்...! சொல்வது சு.சுவாமி!

சுருக்கம்

Rajapaksa needs to come back as President of Sri Lanka - Subramaniyan Swamy

இலங்கையில், மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சிங்களர் பகுதியில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தமிழர் பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஆதரித்துள்ளனர்.

ராஜபக்சேவை, சிங்களர் மீண்டும் ஆதரித்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, இலங்கையின் அதிபராக மீண்டும் ராஜபக்சே வர வேண்டும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், இலங்கை அரசியலில் ராஜபக்சே மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜபக்சே விரைவில் இலங்கையின் அதிபராக வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லையா..? 30 வரை அவகாசம் நீட்டிச்சிருக்காங்க.. மிஸ் பண்ணாதீங்க
லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!