மு.க.ஸ்டாலினை சந்தித்தார்  ராஜ மீனாட்சி… அமைச்சர் சரோஜா மீது அளித்த ஊழல் புகார் குறித்து பேசினார்களா?

 
Published : May 13, 2017, 09:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
மு.க.ஸ்டாலினை சந்தித்தார்  ராஜ மீனாட்சி… அமைச்சர் சரோஜா மீது அளித்த ஊழல் புகார் குறித்து பேசினார்களா?

சுருக்கம்

raja meenakshi met stalin

மு.க.ஸ்டாலினை சந்தித்தார்  ராஜ மீனாட்சி… அமைச்சர் சரோஜா மீது அளித்த ஊழல் புகார் குறித்து பேசினார்களா?

அமைச்சர் சரோஜா மீது லஞ்ச புகார் கொடுத்து  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் ராஜமீனாட்சி. இவர் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவும் அவரது கணவரும்  ,தனதுபணியிட மாறுதலுக்கு ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டார் என்றும்  தொடர்ந்து  குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் மொத்தம் 30 லட்சம் தரவேண்டும் என்று தன்னை மிரட்டியதாக று விரும்பினால் ரூ.30 லட்சம் தரவேண்டும் மிரட்டல் விடுத்தாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார்.

கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் எந்த சூழ்நிலையிலும் பணியை விட்டு விலகமாட்டேன் என்றும் மீனாட்சி கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு அறிக்கை மூலம் விரைவில் பதில் அளிப்பேன் என்று அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் சரோஜாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்  வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி, இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ராஜ மீனாட்சி கூறினாலும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!