
ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்…சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ,கே,விஸ்வநாதன் நியமனம்…
சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பணியிட மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
இதன்படி சென்னை மாநகர காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா, சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல் தலைமை இடத்து ஏடிஜிபியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல் இடத்து தலைமை இடத்து அலுவலக தணை ஆணையராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் துணை ஆணையராக சாம்சன் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக சுனில் குமார் சிங் நியமனம்.
மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக மணிவண்ணன் நியமனம்.
ஜெயஸ்ரீ சேலம் போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அலுவலர்
கயல்விழி தணை ஆணையர் திருப்பூர்
துரை , போக்குவரத்து துணை ஆணையர் கோவை
மகேஸ்வரன். ஏஐஜி சட்டம் ஒழுங்கு , சென்னை
திஷா மிட்டல் , எஸ்.பி. பெரம்பலூர்
சோனல் சந்திரா, எஸ்.பி. சிஐடி, சிவில் சப்ளைஸ்
ஆசியம்மாள் எஸ்,பி. குற்றப்பிரிவு
உள்ளிட்ட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.