
இந்திய வானிலை முன்னறிவிப்பு...வரும் 11 ஆம் தேதி முதல்..உலுக்கி வலுத்து எடுக்கப்போகும் மழை..!
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில்,ஒரு பக்கம் வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி கொண்டே வருகிறது..
மறுபக்கம் மழை குறித்த மிக முக்கிய அறிவிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் வானிலையில் பெரிய மற்றம் இருக்காது.
அதில் குறிப்பாக
பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு உத்தரப்பிரதேசம், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், விதர்பா ஆகியவற்றில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும்,
கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை தெற்கு கர்நாடகாவின் உள்மாவட்டங்கள் அதிக மழை பெரும் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது
மற்ற தேதி மற்றும் மாநிலம்
இதே போன்று 12, 13 ஆகிய தேதிகளில் காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது
கடும் பனி பொழிவு ஒரு பக்கம், ஒரு பக்கம் மழை, இன்னொரு பக்கம் வெயில் என மூன்றும் ஒன்றாக இணைந்து மக்களை ஒருவிதமான கால நிலை மாற்றத்திற்கு கொண்டு செல்கிறது என்பதில் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.