சென்னையை நோக்கி மழை...! மழையால் நனையும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால்...!

 
Published : Mar 18, 2018, 05:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
சென்னையை நோக்கி  மழை...! மழையால் நனையும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால்...!

சுருக்கம்

rain will be in chennai and pondycherry karaikal

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மழை வர வாய்ப்பு உள்ளது என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால் கடந்த ஒரு வாரமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா அருகே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மற்றும் வட தமிழகத்தில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் நேற்று திருவண்ணாமலை கிருஷ்ணகிரி, வேலூர்  உள்ளிட்ட  இடங்களில் இடியுடன் கூடிய பரவலாக காணப் பட்டது

இந்நிலையில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால்  உள்ளிட்ட இடங்களில் இடிஉடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

சென்னையை பொறுத்தவரை

சென்னையை பொறுத்தவரை,வானம் மேகமூட்டமாக  காணப்படும் என்றும்,லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

கோடை காலத்தில் பெய்துள்ள மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!