அன்னக்கிளின்னா பூண்டு ரசம்; நாச்சியார்-ன்னா பன்னீர் மிளகு மசாலாவா! இது இளையராஜா ரசிகரின் வித்தியாசமான முயற்சிங்க...!

First Published Mar 18, 2018, 4:07 PM IST
Highlights
A restaurant in san francisco with ilaiyaraja menu


இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தீவிரமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவரது பாடலைக் கேட்காமல் தூங்குவதில்லை என்று ரசிகர்கள் கூற நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், தங்கள் ஓட்டலில் தயாக்கப்படும் உணவு வகைகளுக்கு இளையராஜா இசையமைத்த படங்களின் பெயர்களை வைத்து விற்பனை செய்யும் அளவுக்கு ஒருவர், இளையராஜாவின் தீவிர ரசிகராக உள்ளார்.

இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இளையராஜா.  1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

2010 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது கடந்த ஜனவரி மாதம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார் இளையராஜா. 

இசையமைப்பாளர் இளையராஜாவை பார்க்கவும், அவருடன் படமெடுத்துக் கொள்ளவும், இளையராஜாவை கொண்டாடவும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், இளையராஜா இசையமைத்து ஹிட்டான படங்களின் பெயர்களில் உணவு வகைகளுக்கு பெயர் வைத்துள்ளார்.

இளையராஜாவின் தீவிர ரசிகரான இவர், அங்கு ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். ஓட்டலில் தயாராகும் உணவு வகைகளுக்கு இளையராஜா இசையமைத்த படங்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்.

அந்த ஓட்டலில் உள்ள மெனு வகைகள் என்னென்ன தெரியுமா?

அன்னக்கிளி    -   பூண்டு ரசம்

நான் கடவுள்   -    கீரை மசால்

மூடுபனி          -    அரிசி சாதம்

தாரை தப்பட்டை  -  புளி சாதம்

நாச்சியார்       -    பன்னீர் மிளகு மசாலா

தளபதி             -    பூசணி கூட்டு

நாயகன்          -    ஓட்ஸ் அல்வா

இந்த மெனு வகைகளை ஆச்சரியமாக பார்க்கும் மக்கள், அதிக அளவில் வாங்கி சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார். இளையராஜா இசையமைத்த ஸ்பெஷல் உணவுகளை ருசித்து சாப்பிட அதிக அளவில் மக்கள் வருவதாக அந்த ஓட்டலின் செஃப் மகேஷ்குமார் கூறினார்.

'அன்னக்கிளி' என்று சொன்னாலோ இளையராஜாவின் இசைதான் நமக்கு ஞாபகத்துக்கு வரும்... ஆனால், இந்த ஓட்டலுக்கு போய் சாப்பிட்டு வந்த பிறகு, அன்னக்கிளி என்றால் 'பூண்டு ரசம்' தான் ஞாபகத்துக்கு வரும் போல...!

click me!