சென்னையில் இப்படியா  இருக்கும் ..?  வானிலை மையம் புது அறிவிப்பு..!

First Published Apr 23, 2018, 10:41 AM IST
Highlights
rain will be in chennai


சென்னையில் இப்படியா இருக்கும் ..?  வானிலை மையம் புது அறிவிப்பு..!

தென் தமிழக  கடலோர  மாவட்டங்களில்,வெப்ப சலனம் காரணமாக தொடர் மழை ஆங்காங்கு பெய்து வருகிறது .

இந்நிலையில், நேற்று மற்றும் நேற்று முன் தினம் அதாவது 21,22 ஆம் தேதியன்று கடல் சீற்றம் அதிகமா இருக்கு என தெரிவிக்கப் பட்டு இருந்தது.\

அதன் படி, அலைகள்  அதிகமாகவும்,இரண்டரை அடி வரை  உயர்ந்து காணப்படுகிறது

தாழ்வான கடற் பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டில் கடல் நீர் புகுந்ததால்,அங்கிருந்து வேறு  இடத்திற்கு சென்றனர்

இந்நிலையில்,கோடை வெப்பம் காரணமாக ஏற்படும் வெப்ப சலனம் காரணமாக  தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மாலை நேரத்தில் வீசும் காற்றின் அளவு அதிகமாக இருக்கும் என்று சென்னையை  பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீனவர்கள்

மூன்றாவது நாளாக தொடரும் கடல் சீற்றம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாததால்,வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது  என மீனவர்கள் தெரிவித்து  உள்ளனர்.  

click me!