குடிபோதையில் தாயை கத்தியால் குத்தவந்த மகன்; தந்தை  தள்ளிவிட்டதில் இறப்பு...

Asianet News Tamil  
Published : Apr 23, 2018, 09:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
குடிபோதையில் தாயை கத்தியால் குத்தவந்த மகன்; தந்தை  தள்ளிவிட்டதில் இறப்பு...

சுருக்கம்

A drunken son try to kill his mother died because of father ...

அரியலூர்

அரியலூரில், குடிபோதையில் தாயை கத்தியால் குத்தவந்த மகனை, தந்தை  தடுத்து தள்ளிவிட்டதில் உயிரிழந்ததார். இது தொடர்பாக தந்தை காவலாளர்கள் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கோயில் எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் மகன் சரவணன் (37). குடிப் பழக்கம் உள்ள இவர், திருமணமாகி மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், இவர் கடந்த 17-ஆம் தேதி விஷம் குடித்து உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் இவரை அடக்கம் செய்தனர். அவரது சாவில் சந்தேகமிருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இதையடுத்து காவலாளர்கள், சரவணன் உடலை மீட்டு,உடற்கூராய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தியதில், சரவணன் குடிபோதையில், தாயைக் கத்தியால் குத்த வந்ததாகவும், அதனை தடுக்க வந்த தந்தை ரங்கராஜ், தள்ளிவிட்டதில் சரவணன்  உயிரிழந்து விட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து காவலாளர்கள் ரங்கராஜை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. 4ம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் அமித்ஷா..!
மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் மழை! உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. நாள் குறித்த வானிலை மையம்